29ம் தேதி பொங்கல் பரிசு ரூ.1000 இபிஎஸ் துவக்கி வைக்கிறார்

பொங்கல் திருநாளையொட்டி 2 கோடி கார்டுகளுக்கு 1,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.2,363 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த திட்டத்தை வரும் 29ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி  தொடங்கி வைக்கிறார்.
பொங்கல் திருநாளையொட்டி கடந்த ஆண்டு ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்பட்டது.
அதே போல இந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்காக ரூ.1,000 ரொக்கமும், பொங்கல் பரிசும் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.
இதற்காக தமிழக அரசு ரூ.2363.13 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்கான அரசாணை இன்று பிறப்பிக்கப்பட்டது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழ்நாட்டில்  பொது வினியோக  திட்டத்தில் அரிசி உள்ளிட்ட  பொருட்கள் வாங்கும் ரேஷன் கார்டு தாரர்களின் எண்ணிக்கை 1 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரத்து 846 ஆகும்.
இந்த கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக 1,000 ரூபாய் வழங்க கள்ளக்குறிச்சியில்  நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
இதன்படி ஒவ்வொரு ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 1,000 ரூபாய் பணத்துடன் பொங்கல் தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 2 அடி கரும்பு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் வழங்கப்படும்.
தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் மூலம் இவற்றை வினியோகம் செய்ய ரூ.2363 கோடியே 13 லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதில் 1 கோடியே 95 லட்சத்து 5 ஆயிரத்து 846 கார்டுதாரர்களுக்கு ரூ.1,000 வழங்க நிதி ஒதுக்கீடுக்கு அனுமதிக்கப்படுகிறது.
பச்சரிசிக்கு ரூ.54 கோடியே 32 லட்சத்து 42 ஆயிரத்து 100-ம், சர்க்கரைக்கு ரூ.92 கோடியே 65 லட்சத்து 35 ஆயிரமும், 2 அடி நீள கரும்புக்கு லாரி வாடகையுடன் சேர்த்து ரு.29 கோடியே 26 லட்சமும், முந்திரி திராட்சை, ஏலக்காய் வாங்க ரூ.78 கோடியே 2 லட்சத்து 33 ஆயிரத்து 84-ம், இவைகளை துணி பையில் போட்டு கொடுக்க ரூ.39 கோடியே 1 லட்சத்து 16 ஆயிரத்து 920-ம் நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
10 லட்சத்து 19 ஆயிரத்து 491 சர்க்கரை கார்டுகளை அரிசி கார்டுகளாக மாற்றுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் 29-ந்தேதிக்குள் மாற்றிக் கொள்ளலாம் என்று அரசு அறிவித்துள்ளதால் அந்த செலவினத்தை கருதி அதற்கும் சேர்த்து மொத்தமாக ரூ.2,363.13 கோடி நிதி ஒதுக் கீடு செய்ய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
இதன் மூலம் மொத்தம் 2 கோடி ரேஷன் அட்டை தாரர்கள் பொங்கல் தொகுப்பு மற்றும் ரூ.1,000 பணம் பெற நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வரும் 29ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.


Popular posts
ராணிப்பேட்டை அருகே காலணி தொழிற்சாலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
Image
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி நிர்வாக மற்றும் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு தொழிலாளருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது
Image
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள் திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த கள்ளக்கடை மார்க்கெட்டை பொதுமக்களிடம் சமூக விலகல் இருக்க வேண்டும் என்பதற்காக காந்திநகர். திருக்கோயிலூர் சாலை . அண்ணா ஆர்ச் ஈசான்ய மைதானம் .ஆகிய இடங்களுக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது இந்த நிலையில் தற்காலிகமா அமைக்கப்பட்டிருந்த மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் சமூக விலகளை கடைப்பிடிக்காமல் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை மற்றும் 8 .வயதுள்ள குழந்தைகளை கொரோனா அச்சம் சிறிதுமின்றி காய்கறி மார்க்கெட்டுக்கு அழைத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Image
வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர்
Image
சிவகங்கை வாணியங்குடி கிராம சேவை மையத்தில் ரூர்பன் திட்டத்தின் கீழ் மகளிர் திட்டம் மூலம்
Image