ரெயில் கட்டணம் உயர்வு பிரதமர் முடிவை அறிவித்ததும் அமல்

புதுடெல்லி : 



மத்திய அரசு விரைவில் ரெயில் கட்டணத்தை கணிசமான அளவுக்கு உயர்த்த முடிவு செய்த நிலையில் பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியதும் கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.
இதையடுத்து பயணிகள் ரெயில் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது தொடர்பாக குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு தனது பரிந்துரையை பிரதமர் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளது. அதில், “பயணிகள் மற்றும் சரக்கு கட்டணத்தை உயர்த்த வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
எனவே மத்திய அரசு விரைவில் ரெயில் கட்டணத்தை கணிசமான அளவுக்கு உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் ராஜ்தானி, சதாப்தி, தூராந்தோ ரெயில்களில் உணவு கட்டணங்கள் உயர்த்தப்பட்டன. முதல் வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு காலை உணவு கட்டணம் ரூ.140, மதியம் மற்றும் இரவு உணவு கட்டணம் ரூ.245 ஆக உயர்த்தப்பட்டது. அதுபோல 2-வது வகுப்பு பயணிகளுக்கு காலை உணவு கட்டணமாக ரூ.105, மதிய, இரவு உணவு கட்டணமாக ரூ.185 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இந்த நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது. மோடி ஒப்புதல் வழங்கியதும் விரைவில் கட்டண உயர்வு விவரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Popular posts
ராணிப்பேட்டை அருகே காலணி தொழிற்சாலையில் சம்பளம் வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.
Image
திருப்பத்தூர் மாவட்டம் நகராட்சி நிர்வாக மற்றும் நகராட்சி ஆணையரிடம் துப்புரவு தொழிலாளருக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது
Image
திருவண்ணாமலையில் கொரோனா பற்றிய பயம் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டுக்கு 3 . வயது 8 வயது மதிக்கத்தக்க குழந்தைகளை எடுத்து வந்த பொதுமக்கள் திருவண்ணாமலை நகரின் மையப்பகுதியில் அமைந்திருந்த கள்ளக்கடை மார்க்கெட்டை பொதுமக்களிடம் சமூக விலகல் இருக்க வேண்டும் என்பதற்காக காந்திநகர். திருக்கோயிலூர் சாலை . அண்ணா ஆர்ச் ஈசான்ய மைதானம் .ஆகிய இடங்களுக்கு காய்கறி மார்க்கெட் மாற்றப்பட்டது இந்த நிலையில் தற்காலிகமா அமைக்கப்பட்டிருந்த மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் சமூக விலகளை கடைப்பிடிக்காமல் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை மற்றும் 8 .வயதுள்ள குழந்தைகளை கொரோனா அச்சம் சிறிதுமின்றி காய்கறி மார்க்கெட்டுக்கு அழைத்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது
Image
வாணியம்பாடி வாணிடெக் சார்பில் அரசு மருத்துவமனைக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பில் வெண்டிலேடர்
Image
சிவகங்கை வாணியங்குடி கிராம சேவை மையத்தில் ரூர்பன் திட்டத்தின் கீழ் மகளிர் திட்டம் மூலம்
Image