இவர்களுக்கு அனிதா போஸ் என்ற மகள் இருக்கிறார். இவர் ஜெர்மனியின் மிகப் பிரபலமான பொருளாதார வல்லுநர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் ஜப்பானின் உதவியுடன் ”ஆசாத் ஹிந்த்” என்கிற “இந்திய தேசிய ராணுவத்தை” கட்டமைத்தார். இதன்மூலம் மலேசியா, சிங்கப்பூர், தென்கிழக்கு ஆசியாவில் இருந்த இந்தியர்களை ஒன்று திரட்டி படையை உருவாக்கினார்.
“இந்தியாவின் போராட்டம்” என்ற புத்தகத்தை எழுதி 1935ல் சுபாஷ் சந்திர போஸ் வெளியிட்டார். ஜெர்மனியில் “ஆசாத் ஹிந்த் ரேடியோ” நிலையத்தை அமைத்தார். தனக்கு ஊன்றுகோலாக உற்சாகமூட்டும் ஆதாரமாக பகவத் கீதையை கருதினார். சுவாமி விவேகானந்தரின் போதனைகளான உலக சகோதரத்துவம், தேசியவாத சிந்தனைகள், சமூக சேவை ஆகியவற்றின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தார்.
இந்தியாவை சுதந்திர நாடாக்க அஹிம்சை மட்டுமே போதாது என்றும், தீவிரவாதம் தான் சரியானது என்றும் எண்ணினார்.